search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதிய ஜனதா"

    • போராட்டத்திற்கு பாரதிய ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார்.
    • மறியலில் ஈடுபட்ட 102 பெண்கள் உள்பட 378 பாரதிய ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில் :

    சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பாரதிய ஜனதா சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பாரதிய ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தும், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட பொருளாளர் முத்துராமன், கவுன்சிலர்கள் அய்யப்பன், வீரசூரப்பெருமாள், சதீஷ் மற்றும் நிர்வாகிகள் சிவக்குமார், சொக்கலிங்கம், ஜெகநாதன், சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் பங்கேற்ற அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 102 பெண்கள் உள்பட 378 பாரதிய ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு
    • தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடந்தது. மாவட்ட செயலாளர் செல்லச் சாமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பா லகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதா வது:-

    இந்தியாவில் நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருகி றது. மணிப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள் ளது. 100 மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவாதிக்க பிரதமரை அழைத்தபோது எந்த பதிலும் இல்லை.

    நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை அடிப்படை யாக கொண்டு இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாடு எந்த காலத்திலும் பொருந்தாது. சட்டசபையை கலைக்கும் இத்தகைய நடவடிக்கை ஏற்புடைய தல்ல.

    கடற்கரை பாதுகாப்பு திருத்த சட்டம் மற்றும் வன பாதுகாப்பு உரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இந்த 2 சட்டங்க ளும் நிறைவேற்றப்பட்டால் வனங்கள் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு செல்லக்கூ டும். அதேபோல் தான் கடற்கரை களை பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு தாரை வார்க்கும் இந்த சட்டமும் நிறை வேற்றப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் வீடு கட்டுவதற்கு ஜல்லி கற்கள் கிடைப்பதில்லை. ஆனால் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத் தில் ரப்பருக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. குமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    இந்தியா கூட்டணியின் சாதனையால் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தியா கூட்டணியை கண்டு மத்திய அரசு பயந்துள்ளது. கார்ப்ப ரேட் நிறுவனங்கள் வாங்கிய ரூ.15.50 லட்சம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசு ரூ.7.50 லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக மத்திய அரசின் தணிக்கை துறை அதிகாரி கூறியுள்ளார். இதற்கு ஏன் மோடியோ, அமித்ஷாவோ, அண்ணா மலையோ வாய் திறக்காமல் உள்ளனர்.

    இந்த ஆண்டு 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா படுதோல்வி யடையும். இந்தியா கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். வருகிற பாராளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பது தீர்க்கமாகி விட்டது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இதில் உள்ள சில நிபந்தனைகளை தமிழக அரசு தளர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் ரகுபதி நன்றி கூறினார்.

    • தி.மு.க. கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு
    • தமிழக கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் அண்ணா விளை யாட்டு அரங்கம் முன்பு நடந்தது. வடக்கு பகுதி செயலாளர் ஜவகர் வர வேற்று பேசினார்.

    குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் பங்கேற்று பேசியபோது, "முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒழுக்கம், நன்னடத்தை உடையவர். எனவே அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.என்.பி.எஸ்.சி. தலைவ ராக பரிந்துரை செய்து கவர்னருக்கு அனுப்பினார். தகுதியானவரை தகுதி யுள்ள பதவிக்கு பரிந்துரை செய்வது தி.மு.க.வின் வழக்கம்.

    ஆனால் கவர்னர் அதை நிராகரித்து உள்ளார். எங்கோ இருந்து வந்த அவர், தமிழ் கலாசாரம் மற்றும் திராவிடம் பற்றி தெரியாத அவர் அனைத் துக்கும் முட்டுக்கட்டை போடுகிறார். அதை முறிய டிக்க வேண்டும். நல்லது செய்ய இடையூறாக இருக்கும் கவர்னரை மாற்ற வேண்டும். ஆனால் அதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அவர் முட்டு கட்டை போட்டால் தான் அவரை அமித்ஷா ஏற்றுக் கொள்வார். அண்ணாமலை சென்றது நடைபயணம் இல்லை. சொகுசு நடை பயணம்" என்றார்.

    கூட்டத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசியதாவது:-

    கலைஞர் என்பது வெறும் பெயர் அல்ல. சந்தன தமிழின் சிந்தனை ஊற்று. கலைஞர் பட்டம் பெறவில்லை. ஆனால் தலைமை தாங்கினார். 60 ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமம் யாரும் இல்லை. ஆனால் அவருக்கு சமமானவரை நிலைநிறுத்த பாசிஸ்டுகள் திட்டம் போட்டுள்ளனர். அதற்காக தான் நடை பயணம் நடக்கிறது. நடைபயணத்துக்கு சொகுசு காரில் வருகிறார். அவதூறு களை அள்ளி வீசுகிறார். கை அசைக்க யாரும் இல்லை என்றாலும் கை அசைக்கிறார். திட்டம் போடுபவர்களிடம் இருந்து மு.க.ஸ்டாலினை மீட்க வேண்டும் என்பது இல்லை. தமிழகத்தை மீட்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சமம் இல்லை. ஆனால் சமமாக இருக்க அவர் துடிக்கிறார். மதுரையில் மாநாடு போட்டார்கள். மாநாட்டில் தீர்மானம் போட்டது வேறு. ஆனால் மாநாட்டின் நோக்கம் என்ன? மாநாடு நடந்த அன்று மதுரையில் மதுபானங்கள் விற்று தீர்ந்தன. சிவகங்கை மாவட்டத்திலும் கோடிக் கணக்கில் மது விற்பனை நடந்துள்ளது. கலைஞர் காலத்தில் செய்ய முடியாததை எல்லாம் செய்ய முடியும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரூபித்து வருகிறார். புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. முழு மதிப்பெண்ணுக்கு கூடுதலாக 1 மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆக முடியாத நிலை உள்ளது. தி.மு.க.வை விமர்சித்தால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். தி.மு.கவை அப்புறப்படுத்தி விடலாம் என்று நினைக்கி றார்கள். அதற்கான நாடகம் தான் நடைபயணம். கர்நாடகாவில் பா.ஜனதா வால் வெற்றி பெற முடி வில்லை. பணத்தை அள்ளி வீசிய நிலையிலும் சிவ குமார் வெற்றி பெற்றார்.

    பிரதமர் ரோடு ஷோ நடத்தி இருக்கிறார். ஆனாலும் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரே மொழி ஒரே நாடு என்று இந்தி யாவினுடைய அரசியல் அமைப்பு சட்டத்தை கிழித்து நொறுக்கி இந்த நாட்டின் அதிபராக வேண்டும் என்று மோடி ஆசைப்படுகிறார். தமிழக ஆளுநர் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்து கிறார். அதிகார துஷ்பிர யோகம் செய்கிறார். நீட்டுக்கு விதிவிலக்கு கேட்டு தமிழ்நாடு அரசு தீர்மானத்தில் கையெழுத்து போட முடியாதால் தந்தையும் மகனும் இறந்து போனார்கள். மணிப்பூரில் திட்டமிட்டு இனப்படு கொலை நடத்தப்பட்டுள்ளது

    9 ஆண்டு பாரதிய ஜனதாவின் மத்திய ஆட்சியில் ரூ. 7.50 கோடி ஊழல் நடந்துள்ளது. செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறை 17 மணி நேரம் விசாரிக்க என்ன இருக்கிறது. பா.ஜனதா கட்சி இனி ஆட்சிக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் பசலி யான், தில்லை செல்வம், தாமரை பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மோதிரமலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி
    • சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

    கன்னியாகுமரி ;

    குலசேகரம் அருகே உள்ள மோதிரமலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவரது ரப்பர் தோட்டத்திற்கு சிவக்குமார் நேற்று காலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் திடீரென வந்த சிறுத்தை புலி அவரை தாக்கியது. இதனால் சிவக்குமார் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவக்குமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று பா.ஜ.க. கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சியின் 50-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், முன்னாள் ராணுவ வீரருமான அய்யப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ஜெகநாதன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் சுபாஷ் மற்றும் குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆகியோர் நேரில் சென்று சிவக்குமாரை சந்தித்து சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

    • மாவட்ட தலைவர் தர்மராஜ் அறிக்கை
    • 23-ந்தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மணல் மற்றும் கனிம கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், விலை வாசிகளை கட்டுப்படுத்த வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி வார்டு பகுதிகளிலும் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள் என மொத்தம் 235 இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த கிளை பொறுப்பாளர்கள் அணி மற்றும் பிரிவுகளின் பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, மாவட்ட, மாநில மற்றும் தேசிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • குமரி சங்கமம் நிகழ்ச்சியில் மேடையில் அனுமதிக்காததால் முடிவு
    • கவுன்சிலர் ரோஸிட்டாவிற்கு மேடையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா திடலில் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு உத்வேகமாக அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர் ரோஸிட்டா, நாகர்கோவில் கிழக்கு மாநகர பொருளாளர் திருமால் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், மாவட்ட தலைவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர்.

    இது பாரதிய ஜனதாவி னர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் திருமால் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்ற பகுதி 24-வது வார்டுக்குட்பட்ட பகுதி ஆகும்.

    எனவே கவுன்சிலர் ரோஸிட்டாவிற்கு மேடையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு அணிவிக்க ஆளுயர ரோஜாப்பூ மாலை மற்றும் செங்கோலும் தயார் செய்து வைத்திருந்தார்.

    ஆனால் ரோஸிட்டாவை மேடையில் அனுமதிக்க வில்லை. இதனால் அண்ணாமலைக்கு போட வாங்கி வைக்கப்பட்டிருந்த மாலை மற்றும் செங்கோலை வழங்க முடியவில்லை. இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலை யில் தான் அண்ணாமலைக்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த மாலையை கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் ஊர்வலமாக சென்று வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு அணிவித்துள்ளனர்.

    • போலீசார் விசாரணை
    • பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

    நாகர் கோவில் நாகராஜா திடலில் நாளை மறுநாள் (2-ந்தேதி) நடைபெறும் குமரி சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். இது தொடர்பாகவும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

    செண்பகராமன் புதூர் பகுதியில் தோவாளை இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் வாகன பிரசாரம் நடை பெற்றது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் கிடந்த கல்லால் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதுகுறித்து மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பத்மநாபன் ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சி.சி.டி.வி. காமிராவில் பா.ஜ.க. நிர்வாகிகளை மிரட்டி சென்றவர்களின் வாகன எண் பதிவாகி இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது பா.ஜ.க. நிர்வாகிகளை மிரட்டிய வர்கள் குறித்து அடையாளம் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 3 பேரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் தப்பி ஓட்டம்
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசாரிடம் வழங்கி உள்ளார்கள்.

    நாகர்கோவில் :

    மத்திய பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனை களை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் பார திய ஜனதாவினர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் நாகர்கோவில் நாகராஜா திடலில் வருகிற 2-ந்தேதி குமரி சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். இது தொடர்பாகவும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரங்கள் நடந்து வருகிறது. தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட இளைஞரணி சார்பில் பூதப் பாண்டி, செண்பகராமன்புதூர் பகுதியில் வாகன பிரசாரம் நேற்று நடந்தது.

    கல்லுமடமுக்கு பகுதியில் நேற்று இரவு இளைஞரணியினர் பிரசாரம் மேற்கொண்டு வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறினார்கள். திடீரென அந்த பகுதியில் கிடந்த கல்லை எடுத்து வாகனத்தின் மீது வீசினார்கள்.

    இதையடுத்து பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கே திரண்டனர். இதற்கிடையில் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பத்மநாபன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்துள்ளார்.

    புகாரில் பாரதிய ஜனதா சார்பில் நடந்த வாகன பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி கல்வீசி தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசாரிடம் வழங்கி உள்ளார்கள்.

    அந்த சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளில் அந்த வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் எண் தெளிவாக பதிவாகியுள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்
    • மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் எனது (தர்மராஜ்) தலைமையில் நடைபெற உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கடந்த 4-ந்தேதி நடைபெற இருந்த குமரி சங்கமம் நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ள இருந்தார். ஆனால் கடந்த 3-ந்தேதி ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை சோகத்தில் ஆழ்ந்ததால் நாகராஜா கோவில் திடலில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட குமரி சங்கமம் நிகழ்ச்சி வருகிற 2-ந்தேதி மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் எனது (தர்மராஜ்) தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மாநில செயலாளர் மீனாதேவ், மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக இணை பார்வையாளர் சுதாகர்ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றுகிறார். எனவே நிகழ்ச்சியில் தொண்டர்களும், பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது
    • பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சனை, கியாஸ் விலை உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடி

    நாகர்கோவில்:

    மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து திருவட்டார் காங்கிரஸ் கிழக்கு வட்டார ஓ.பி.சி. பிரிவு சார்பில் ஆற்றூர் சந்திப்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டூவர்ட் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது, பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சியில் வந்தவர்கள், இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

    பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சனை, கியாஸ் விலை உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள். ராகுல்காந்திக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடியை கொடுத்து, அவர் மேடையில் பேசிய ஒரு விஷயத்தை வைத்து அவருக்கு நெருக்கடி கொடுத்தது, தண்டனை கொடுத்து, அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தனர். பா.ஜ. க.வை பொறுத்தவரையில் அவர்கள் செய்வதுதான் சரி என்று கூறி அரசு நிறுவனங்களை தனியாரி டம் கொடுத்துக் கொண்டி ருக்கிறார்கள். ஒரு சிலரை பணக்காரர்கள் ஆக்க வேண்டும் எனவும், அவர்களை வைத்து லாபம் அடைய வேண்டும் எனவும், செயல்படும் அவர்களின் செயல்பாட்டை கண்டித்து, ராகுல் காந்தி 2024-ம் ஆண்டு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும் மக்களை சந்தித்து பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். 3, 4 மாதங்களாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து சென்றார். அது சாதாரண விஷயம் அல்ல. மக்களை சந்தித்து, அவர்களின் குறை களை கேட்டு மக்களுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அந்த யாத்தி ரை நடத்தினார். அந்த எண்ணம் தான் இந்தியாவை ஒருங்கிணைக்கும், புதிய மாற்றத்தை கொண்டு வரும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு 2024-ல் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கு வதற்கு ஒருங்கி ணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்குமார், மாநில மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மாவட்ட மகிளாக காங்கிரஸ் தலைவி ஷர்மிளா ஏஞ்சல், மாவட்ட கவுன்சிலர் செலின்மேரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • 6 பேரும் தினமும் காலை, மாலை கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்
    • போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செட்டிகுளம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.

    அப்போது பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பாரதிய ஜனதா அலுவலகத்தில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பினரும் காயமடைந்த னர். இந்த மோதல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 22 பேர் மீதும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ் உட்பட 31 மீதும் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜன் மாவட்ட துணை தலைவர் சொக்கலிங்கம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ், ஜோஸ்லின் ஜெலின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களை விசாரித்த கோர்ட் 6 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. 6 பேரும் தினமும் காலை, மாலை கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து இன்று காலை பாளையங் கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், டைசன், ஜோஸ்லின் ஜெலின் ஆகிய6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.விடு விக்கப்பட்ட நிர்வாகிகள் பாளையங்கோட்டையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தனர். இைதயடுத்து ஆரல்வாய்மொழியில் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராஜா, இன்ஸ்பெக்டர்கள் ராமர், கோபி அகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது போலீசார் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாரதிய ஜனதா நிர்வாகிகளின் வாகனங் களையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட கார்களில் வந்திருந்தனர். 5 கார்களை மட்டுமே அனுமதிப்போம் என்று போலீசார் தெரி வித்தனர். மற்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். முதலில் 5 கார்கள் சென்ற பிறகு மற்ற கார்களை போலீசார் விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பிரச்சினைகள் எதுவும் நடை பெறாமல் இருக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் பேரூராட்சி பாரதிய ஜனதா கவுன்சிலரும், பாரதிய ஜனதா மாவட்ட ஐ.டி பிரிவு துணைத் தலைவருமான சுபாஷ் முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து நேற்று மாலை தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை தாங்கினார். தென்தா மரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப், ஒன்றிய பாரதிய ஜனதா பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், பேரூர் தலைவர் தாமரைபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., ஸ்ரீ குரு சிவச்சந்திரன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், பாஜக பொரு ளாதார பிரிவு மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

    போராட்டத்தில் மைலாடி பேரூர் தலைவர் பாபு, தென்தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பாய், பாமா, மேனகா, அமுதா, பாரதிய ஜனதா நிர்வாகிகள் ராஜகுமாரன், சந்திரசேகர், சிவகுமார், முத்துகிருஷ்ணன், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×